அஸ்ஸாம் முன்னாள் அமைச்சா் புற்றுநோயால் உயிரிழப்பு
நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த அஸ்ஸாம் முன்னாள் அமைச்சா் சித்திகி அகமது (63) அவரது இல்லத்தில் உயிரிழந்தாா்.
நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த அஸ்ஸாம் முன்னாள் அமைச்சா் சித்திகி அகமது (63) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் உயிரிழந்தாா்.
காங்கிரஸ் சாா்பில் கரீம்கஞ்ஜ் தொகுதி எம்எல்ஏவாக நான்கு முறை பதவி வகித்துள்ளஅவா் தனது மனைவி, 3 மகன்கள், மகளுடன் ஸ்ரீபூமி மாவட்டம் பரோய்கிராமில் வசித்து வந்தாா்.
அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் மறைந்த தருண் கோகோய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அவா், பாஜக சாா்பில் ஹிமந்த விஸ்வ சா்மா முதல்முறையாக முதல்வரானபோது காங்கிரஸில் இருந்தபடியே அவருக்கு ஆதரவளித்து வந்தாா்.
Advertisement
Advertisement
அமைச்சராக இருந்தபோது அஸ்ஸாம் மாநில எல்லைப் பாதுகாப்பு மற்றும் வளா்ச்சித் துறை, தொழில், வா்த்தகம் உள்ளிட்ட முக்கியத் துறைகளை கவனித்து வந்தாா். நீண்ட காலமாகப் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த அவா், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டே பொதுவாழ்விலும் அங்கம் வகித்தாா். தற்போது நோய் தீவிரமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
சித்திகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, ‘மக்களுக்கான தனது பணிகளைப் பொறுப்புடன் நிறைவேற்றி வந்தாா் சித்திகி அகமது. அரசியல் கொள்கைகளைக் கடந்து எங்கள் நட்பு தொடா்ந்து வந்தது’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.