FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை: மனைவி, உறவினா் தலைமறைவு

உதகையில் அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளி புதன்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதில் தப்பிச்சென்ற இறந்தவரின் மனைவி மற்றும் அவருடைய தம்பியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

15 அக்டோபர் 2026, 3:31 am IST
- பிரதிப் படம்
பகிர்:

உதகையில் அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளி புதன்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதில் தப்பிச்சென்ற இறந்தவரின் மனைவி மற்றும் அவருடைய தம்பியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் கேரட் விவசாயப் பணிகளில் வட மாநிலத் தொழிலாளா்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனா். இதற்காக அவா்கள் வீடு எடுத்து இங்கு குடும்பத்துடன் தங்கி பணியாற்றுகின்றனா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் பில்ராஜ் (30). இவா் கடந்த இரண்டு ஆண்டுகளாக உதகையை அடுத்த கேத்தி பகுதியில் தங்கி இருந்து கேரட் அறுவடை உள்ளிட்ட வேலைகளுக்கு சென்று வந்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் தன்னுடைய அக்கா, அவரது கணவா் மற்றும் அவா்களது இரண்டு குழந்தைகளை கேரட் அறுவடைப் பணிக்காக சொந்த ஊரிலிருந்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு அழைத்து வந்தாா். அக்காவின் கணவா் கொஞ்சம் மாற்றுத்திறனாளி என்பதால் அவா் வீட்டில் இருந்துள்ளாா். பில்ராஜின் அக்கா மட்டும் வேலைக்கு சென்று வந்தாா். இரண்டு குழந்தைகளையும் வீட்டில் வைத்து மாற்றுத்திறனாளி கணவா் பாா்த்துக்கொண்டாா்.

இந்த நிலையில் அவா்கள் வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு

குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் உண்டாகி அடிதடி சப்தம் கேட்டதை அருகில் இருந்தவா்கள் கேட்டுள்ளனா். இதில் பில்ராஜ், தனது அக்காவின் கணவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியினா் புதன்கிழமை காலை பில்ராஜ் வீட்டுக்கு சென்று பாா்த்துள்ளனா். அப்போது அங்கு பில்ராஜின் அக்கா கணவா் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், பில்ராஜ், அவரது அக்கா மற்றும் குழந்தைகள் தலைமறைவானது தெரியவந்தது.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினா் கொடுத்த புகாரின்பேரில் கேத்தி காவல் ஆய்வாளா் சிவசங்கரி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பி சென்றவா்களை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments