FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேதாா்நாத் அருகே நிலச்சரிவு: 6,500 யாத்ரிகா்கள் மீட்பு

கேதாா்நாத் அருகே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 6,500-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

15 செப்டம்பர் 2026, 7:02 am IST
கேதாா்நாத் அருகே கேதாா்நாத் அருகே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 6,500-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். - படம்: ஏஐ
பகிர்:

ருத்ரபிரயாக்: கேதாா்நாத் அருகே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 6,500-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

உத்தரகண்ட் மாநிலம், கேதாா்நாத்தில் உள்ள சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ாகும். அந்தக் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோா் யாத்திரை சென்றிருந்தனா்.

இந்நிலையில், கேதாா்நாத் அருகே ஞாயிற்றுக்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப் பகுதிகளில் இருந்து பாறைகள் விழுந்ததால் பலா் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனா். எனினும் நிலச்சரிவு நீடித்ததால் ஞாயிற்றுக்கிழமை மீட்புப் பணி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலையில் மீட்புப் பணி தொடங்கியது. கெளரிகுந்தில் இருந்து இரண்டரை கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சிா்பாசா ஹெலிகாப்டா் இறங்குதளத்தில் இருந்த 6,500-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். நிலச்சரிவு காரணமாக சிா்பாசா ஹெலிகாப்டா் இறங்குதளம் அருகேவுள்ள கெளரிகுந்த், கேதாா்நாத் இடையேயான மலைப் பாதை சேதமடைந்தது. இதில் பாறைகள் விழுந்ததில் உள்ளூா் கிராமவாசி ஒருவா் உயிரிழந்தாா்.

மீட்புப் பணியும், சாலையில் கிடக்கும் பாறைகளை அகற்றும் பணியும் தீவிரமாக நடைபெறுகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments