வார்தா ஹிந்திப் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திற்கு சிஜேபி ஆதரவு!
மகாத்மா காந்தி சர்வதேச ஹிந்திப் பல்கலைக்கழகத்தில் முனைவர் சேர்க்கை போராட்டத்துக்கு சிஜேபி ஆதரவுவளித்தது பற்றி...
மாகாராஷ்டிரத்தில் உள்ள மகாத்மா காந்தி சர்வதேச ஹிந்திப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
1997-ல் நிறுவப்பட்ட மத்திய பல்லைக்கழகமான மகாத்மா காந்தி சர்வதேச ஹிந்திப் பல்கலைக்கழகம். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை மாதம் முதல் ஆறு ஆய்வாளர்கள் உள்பட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சம்யக் வித்யார்த்தி அந்தோலன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், ஆய்வாளருமான நிரஞ்சன் ஓபராய் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
Advertisement
Advertisement
கடந்த நான்கு ஆண்டுகளாக முனைவர் பட்ட (பிஎச்டி) சேர்க்கை நிறுத்தப்பட்டதாகவும், முனைவர் பட்டச் சேர்க்கை மற்றும் பெண்கள் ஆய்வுகள், திரைப்பட ஆய்வுகள் ஆகிய பாடப்பிரிவுகளை 2022-ல் பல்கலைக்கழகம் நிறுத்திவிட்டு, அவற்றை உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் மையத்திற்கு மாற்றியது.
நிறுத்தப்பட்ட துறைகளை மீண்டும் தொடங்கக் கோரி, 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையெழுத்திட்ட மனுவை துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து, ஆகஸ்ட் மாதத்தில் பல்கலைக்கழகம் மாணவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதைத் தொடர்ந்து ஓபராய் உள்பட ஆறு மாணவர்கள் மீது ராம் நகர் காவல் நிலையத்தில் முதல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த ஆறு பேரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.
சிஜேபி ஆதரவு
சனிக்கிழமையன்று வார்தா ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைச் சந்தித்த சிஜேபி ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே அவர்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
அமைதியான போராட்டத்தைக் காவல் துறை மூலம் ஒடுக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ள கல்வி உரிமைக்காக அவர்கள் போராடுகிறார்கள். எனவே, உரிமைக்காகப் போராடுவது ஒரு குற்றச் செயலாக இருக்க முடியாது. எனவே, ஆராய்ச்சி மாணவர்கள் மீது போடப்பட்ட எப்ஐஃஆர்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கிடையில், கோரிக்கைகளை முன்வைப்பதாகக் கூறிக்கொண்டு பல்கலைக்கழகத்தின் நிர்வாக, கல்விசார் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதோ, அலுவலகங்களைப் பூட்டுவதோ, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் வருகையைத் தடுப்பதோ, பல்கலைக்கழகச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பதோ எந்தவொரு மாணவரையோ அல்லது குழுவையோ அனுமதிக்க முடியாது என்று பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணை முடியும் வரை, 6 ஆராய்ச்சி மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முனைவர் பட்டப் படிப்பிற்கான சேர்க்கை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், பிரயாக்ராஜுக்கு மாற்றப்பட்ட பாடநெறிகள் குறித்துப் பல்கலைக்கழகம் பரிசீலித்து வருவதாகவும் பல்கலை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.