தில்லி உயர்நீதிமன்றத்தில் 7 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!
தில்லி உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றது பற்றி..
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 7 நீதிபதிகள் பதவியேற்றதையடுத்து, மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 50 - ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட நீதித்துறையில் நீதித்துறை அதிகாரிகளாகப் பணியாற்றி வந்த நிவேதிதா அனில் சர்மா, நிஷா சகாய் சக்சேனா, சஞ்சய் சர்மா, பாரத் பராஷர், அதிதி சௌத்ரி, தினேஷ் பட் மற்றும் அருண் பரத்வாஜ் ஆகியோருக்குத் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில், பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு தலைமை நீதிபதி புதிய நீதிபதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
நீதிபதிகள் சஞ்சய் சர்மா மற்றும் சக்சேனா ஆகியோர் ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நிலையில், மற்ற 5 பேரும் இந்தியில் பதவிப் பிரமாணம் செய்தனர்.
இவர்கள் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.