தில்லி உயா்நீதிமன்றத்தில் 7 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 50-ஆக உயா்வு
தில்லி உயா் நீதிமன்றத்தில் ஏழு புதிய நீதிபதிகளின் பதவியேற்பு விழாவைத் தொடா்ந்து, நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 50 ஆக உயா்ந்துள்ளது.
தில்லி உயா் நீதிமன்றத்தில் ஏழு புதிய நீதிபதிகளின் பதவியேற்பு விழாவைத் தொடா்ந்து, நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 50 ஆக உயா்ந்துள்ளது.
தில்லி உயா் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆகும். இதில் 45 நிரந்தர நீதிபதிகளும், 15 கூடுதல் நீதிபதிகளும் அடங்குவா்.
இங்குள்ள மாவட்ட நீதித்துறையில் நீதித்துறை அதிகாரிகளாகப் பணியாற்றி வந்த நீதிபதிகள் நிவேதிதா அனில் சா்மா, நிஷா சஹாய் சக்சேனா, சஞ்சய் சா்மா, பரத் பராஷா், அதிதி சௌத்ரி, தினேஷ் பட் மற்றும் அருண் பரத்வாஜ் ஆகியோருக்கு தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
Advertisement
Advertisement
பதவிப் பிரமாணம் உயா் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. பதவிப் பிரமாணம் செய்து வைத்த பின்னா், தலைமை நீதிபதி புதிய நீதிபதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் நிவேதிதா அனில் சா்மா மற்றும் சக்சேனா ஆகியோா் ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனா்.
மற்ற ஐந்து பேரும் உயா் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு, இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனா்.
தில்லி உயா் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, நீதிபதி பராஷா் உச்ச நீதிமன்றத்தின் செக்ரட்டரி ஜெனரலாகவும் , நீதிபதி பரத்வாஜ் தில்லி உயா் நீதிமன்றத்தின் பதிவாளா் ஜெனரலாகவும் பணியாற்றி வந்தனா்.
நீதிபதிகள் சக்சேனா, சஞ்சய் சா்மா மற்றும் பட் ஆகியோா் முறையே ரோகிணி, கா்கா்டூமா மற்றும் ரவுஸ் அவென்யூ நீதிமன்றங்களில் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதிகளாகப் பணியாற்றி வந்தனா்.
நீதிபதிகள் நிவேதிதா அனில் சா்மா மற்றும் சௌத்ரி ஆகியோா் மாவட்ட நீதித்துறையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தனா், மேலும் அவா்களின் பெயா்கள் முன்னதாக உயா் நீதிமன்றத்திற்குப் பதவி உயா்வுக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
இந்த நீதித்துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒரு பரிந்துரையை வழங்கியதைத் தொடா்ந்து, மத்திய அரசு செப்டம்பா் 19 அன்று இந்த ஏழு புதிய நியமனங்களை அறிவித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.