கோழிக்கோட்டில் இருசக்கர வாகனங்கள் மோதல்: கால்பந்து வீரர் பலி; மற்றொருவர் காயம்
கோழிக்கோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் கால்பந்து வீரர் பலியானது பற்றி....
கோழிக்கோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் கால்பந்து வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள காந்தி சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கால்பந்து வீரர் பலியானதோடு மற்றொருவர் காயமடைந்தார் என்று போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர். பலியானவர் திருச்சூர் மாவட்டம், ஒல்லூரைச் சேர்ந்தவரும், காலிகட் எஃப்சி அணியின் வீரருமான ரிஜான் ஜோஸ்(29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் கனி அகமத் நிகம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கவுள்ள சூப்பர் லீக் கேரளம் போட்டிக்காகத் தயாராகி வந்த 'காலிகட் எஃப்சி' அணியின் ஒரு பகுதியாக இவர்கள் இருவரும் கோழிக்கோடு வந்திருந்தனர். ரிஜான் கடந்த முறை நடைபெற்ற சூப்பர் லீக் கேரளம் போட்டியில் 'ஃபோர்கா கொச்சி' அணிக்காக தடுப்பாட்டக்காரராக விளையாடியிருந்தார்.
Advertisement
Advertisement
போலீஸாரின் தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு 10.40 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள கிறிஸ்டியன் கல்லூரிக்கு அருகிலுள்ள மேம்பாலத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த இரண்டு கால்பந்து வீரர்களும் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம், எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக போலீஸார் தெரிவித்தனர். மோதிய வேகத்தில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் ரிஜானுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ரிஜான் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என்று போலீஸார் கூறினர். நிகமின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'காலிகட் எஃப்சி' அணியின் மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கால்பந்து வீரர்களின் வாகனத்தின் மீது மோதிய இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் மீது நடக்காவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கூராய்வுக்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A footballer died and another was injured after two motorcycles collided on the Gandhi Road flyover here, police said on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.