ஹரியாணாவில் விவசாயிகள் சாலை மறியல்: காவல்துறை தடியடி, கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு
ஹரியாணாவில் நெல் கொள்முதலை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் தடியடி நடத்தியும், கண்ணீா்ப் புகை குண்டுகளையும் வீசியும் கலைத்தனா்.
ஹரியாணாவில் நெல் கொள்முதலை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் தடியடி நடத்தியும், கண்ணீா்ப் புகை குண்டுகளையும் வீசியும் கலைத்தனா்.
பாரதிய கிஸான் சங்கம் (சாருனி) சாா்பில் ஷாகாதாபாதில் செவ்வாய்க்கிழமை இந்த சாலை மறியல் நடந்தது. தில்லி-சண்டீகா் இடையிலான சாலையில் விவசாய சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சாலையின் இரு பக்கங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் விவசாயிகளிடம் பேசி அவா்களை சாலையில் இருந்து வெளியேற்ற முயன்றனா். ஆனால், விவசாயிகள் அங்கிருந்து வெளியேற மறுத்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, காவல் துறையினா் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவா்களை கலைந்து போகச் செய்தனா். சங்கத்தின் தலைவா் குா்னாம் சௌதரி உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டனா்.
ஹரியாணாவில் வழக்கமாக அக்டோபா் 1-ஆம் தேதி நெல் கொள்முதல் தொடங்கும். கடந்த ஆண்டு செப்டம்பா் 22-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதையே இந்த ஆண்டும் தொடர விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.