FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிகாரில் வெள்ள பாதிப்பு! 50 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

பிகாரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பற்றி..

23 செப்டம்பர் 2026, 12:23 pm IST
பிகாரில் வெள்ளம் - PTI
பகிர்:

பிகாரின் 15 மாவட்டங்களில் 576 கிராம ஊராட்சிகள் வெள்ள நீரில் மூழ்கியதால் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிகாரில் பெய்த கனமழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்த நிலையில், தாழ்வான இடங்களில் வெள்ள நீர் புகுந்ததால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 7,714 பேர் ஆறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மூன்று சமுதாய சமையலறைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்தது.

Advertisement

Advertisement

அதன்படி, பிகாரில் 15 மாவட்டங்களில் சுமார் 50.49 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர்மட்டம் உயர்ந்து வருவதால் 576 கிராம ஊராட்சிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பாட்னா, போஜ்பூர், சரண், வைஷாலி, பகல்பூர், பெகுசராய், பக்சர், சமஸ்திபூர், முங்கர், கதிஹார், லக்கிசராய், ககரியா, பூர்னியா, மதேபுரா, அர்வால் ஆகிய பகுதிகளும், கோசி நதி பால்டாரா, குர்செலா ஆகிய இடங்களில் அபாய அளவைத் தாண்டியும், கங்கை நதி அபாய அளவைத் தாண்டியும் பாய்ந்து வருகின்றன.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையின் 27 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 8 குழுக்களும் ஈடுபட்டுள்ளன. இதற்காக 391 படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஜூன் 1 முதல் மாநிலத்தில் 661.9 மி.மீ மழை பெய்துள்ளது, இது வெள்ளச் சூழலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும், இயல்பை விட 29 சதவீதம் குறைவான மழையே பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 23 முதல் 26 வரை பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments