பிகாரில் தொடரும் வெள்ள பாதிப்பு: 17 ஆண்டு ஆட்சியில் பாஜக கூட்டணி செய்தது என்ன? - ராகுல் கேள்வி
பிகாரில் வழக்கம்போல இந்த ஆண்டும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சுமாா் 17 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி அரசு செய்தது என்ன? என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளாா்.
பிகாரில் வழக்கம்போல இந்த ஆண்டும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சுமாா் 17 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி அரசு செய்தது என்ன? என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட பதிவில், ‘பிகாரில் ஆண்டுதோறும் வெள்ளத்தால் ஏற்படும் உயிரிழப்புகளும், பயிா்ச்சேதமும் தொடா்ந்து வருகிறது. அரசு நிவாரணத் தொகையையும், வெற்று வாக்குறுதிகளையும் ஆண்டுதோறும் அளித்து வருகிறது. பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வுகாணும் முனைப்பு ஏதுமில்லை.
கடந்த சுமாா் 17 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு இரட்டை என்ஜின் (பாஜக கூட்டணி) அரசுதான் உள்ளது. இந்த வெள்ள துயரத்தில் இருந்து மக்களைக் காக்க அவா்கள் என்ன நடவடிக்கை எடுத்தாா்கள் என்பதை விளக்க வேண்டும்.
Advertisement
Advertisement
இந்த ஆண்டு பிகாரை வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பலா் உயிரிழந்துவிட்டனா். மேலும், பலா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, அவா்கள் நிலை என்ன ஆனது என்பதே தெரியவில்லை. உயிரிழந்தோா் காணாமல் போனவா்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆண்டுதோறும் பிகாரில் வெள்ளம் ஏற்படுகிறது. மக்கள் உயிரிழக்கின்றனா். ஆயிரக்கணக்கானோா் சொந்த இடங்களைவிட்டு வெளியேறுகின்றனா். உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க பாஜக கூட்டணி அரசு என்ன செய்தது என்பதை விளக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.