தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு வாக்குச்சீட்டு முறையில் மீண்டும் தேர்தல் வேண்டும்! உத்தவ் தாக்கரே
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதையடுத்து உத்தவ் தாக்கரே கருத்து...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில், 10 மாதங்களில் 14 முறை எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுத்துப்பூர்வ கடிதம் அளித்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் சிவசேனை (யுபிடி) கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே செய்தியாளர்களுடன் பேசுகையில்,
Advertisement
Advertisement
"இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையரை உடனடியாக பணிநீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததற்காகத் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் உண்மையான முகம் தற்போது வெளியே வந்துள்ளது.
தேர்தல் ஆணையம் எடுத்த அனைத்து தவறான முடிவுகளையும் அந்த இரு தேர்தல் ஆணையர்களும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நீதிமன்றமும் இந்த விவகாரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
மகாராஷ்டிரம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அதிகார வெறிக்காக இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன.
எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு தேர்தல் நடைபெற்ற மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களை ரத்து செய்துவிட்டு, அந்த மாநிலங்களில் வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தி மறுதேர்தல் நடத்த வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மக்களின் வாக்குக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.
Gyanesh Kumar should be jailed; hold repolls in Maharashtra, WB and TN with ballot papers: Uddhav
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.