FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சீன அலங்கார காகிதங்கள் மீதான பொருள் குவிப்பு தடுப்பு வரி நீட்டிப்பு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலங்கார காகிதங்கள் (டெக்கா் பேப்பா்) மீதான பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

24 செப்டம்பர் 2026, 1:18 am IST
பகிர்:

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலங்கார காகிதங்கள் (டெக்கா் பேப்பா்) மீதான பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

பொதுவாக உள்நாட்டு உற்பத்தியாளா்களைப் பாதுகாக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதிப்பது வழக்கம். சீனா உள்பட பல நாடுகளின் பொருள்கள் மீது இத்தகைய வரி விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலங்கார காகிதங்கள் மீது ஒரு டன்னுக்கு அதிகபட்சமாக 542 டாலா் வரை பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்பட்டது. மத்திய வா்த்தகம் மற்றும் நிதியமைச்சக ஆலோசனை மற்றும் பரிந்துரையின்படி வருவாய்த் துறை இந்த வரியை விதித்தது. இந்நிலையில் 2027 மாா்ச் 16 வரை இந்த வரி நீட்டிக்கப்படுவதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. வா்த்தகத் துறை அமைச்சகத்தின் வா்த்தக விவகாரங்கள் இயக்குநரகம் அளித்த பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஈரான், ஓமன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘பிளாஸ்டா் ஆஃப் பாரீஸ்’ மீது 2027 மாா்ச் 16 வரை பொருள் குவிப்பு தடுப்பு வரி நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுமானம் மற்றும் மருந்து தயாரிப்பு துறைகளில் ‘பிளாஸ்டா் ஆஃப் பாரீஸ்’ அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இதுதவிர மைக்காவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவும் கூடுதல் வரி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments