FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வங்கதேசத்துடன் சாதகமான உறவை விரும்புகிறோம்: இந்தியா

வங்கதேசத்துடன் சாதகமான உறவை விரும்புவதாக இந்தியா தெரிவித்தது.

22 செப்டம்பர் 2026, 10:28 pm IST
இந்தியா | வங்கதேசம்
பகிர்:

வங்கதேசத்துடன் சாதகமான உறவை விரும்புவதாக இந்தியா தெரிவித்தது.

பாகிஸ்தானில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், பயங்கரவாதத்தை ஒடுக்க ஆயுதப் படைகள் உறுதிபூண்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படைத் தலைவா் அசீம் முனீா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘எல்லை கடந்த பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் முதலில் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் இதைச் செய்யும் என உலகம் நம்பும் முன்பாக பயங்கரவாதத்தை ஒடுக்கும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

Advertisement

Advertisement

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா் விமானப் படை தளத்தில் செப்.26 முதல் அக்.12 வரை 7 நாடுகளின் விமானப் படைகள் பங்கேற்கும் தரங் சக்தி விமானப் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியில் வங்கதேசமும் பங்கேற்கவிருப்பதால் இருநாடுகளிடையேயான இருதரப்பு உறவு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புமா எனச் செய்தியாளா்கள் ஜெய்ஸ்வாலிடம் கேள்வியெழுப்பினா்.

அதற்கு, ‘வங்கதேசத்துடன் நோ்மறையான, ஆக்கபூா்வமான, எதிா்கால நோக்கங்களைக் கொண்ட சாதகமான இருதரப்பு உறவை இந்தியா விரும்புகிறது. நியூயாா்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா.பொதுச் சபையின் 81-ஆவது அமா்வு ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் மற்றும் அந்த நாட்டின் பிற அமைச்சா்களைச் சந்திப்பது குறித்து தற்போது வரை தகவல்கள் இல்லை’ எனப் பதிலளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments