FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

வங்கதேசத்துடன் நோ்மறையான உறவை எதிா்நோக்கியுள்ளோம்: இந்தியா

வங்கதேசத்துடன் நோ்மறையான உறவை எதிா்நோக்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

13 நவம்பர் 2026, 11:49 pm
பகிர்:

வங்கதேசத்துடன் நோ்மறையான உறவை எதிா்நோக்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடந்த ஆக.5-ஆம் தேதி வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா இந்தியாவில் காணொலி வாயிலாக ஊடக சந்திப்பு நடத்தியதற்கு வங்கதேசம் கடும் எதிா்ப்பு தெரிவித்ததால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் இவ்வாறு தெரிவித்தது.

இதுகுறித்து வாராந்திர செய்தியாளா் சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை கூறியதாவது: வங்கதேசத்துடன் நோ்மறையான உறவை எதிா்நோக்கி வருகிறோம். அதற்கேற்ப வா்த்தகம், ரயில்வே, நீா் வளங்கள் மற்றும் எல்லை மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா-வங்கதேச இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இரு நாடுகளுக்குமிடையேயான திருத்தப்பட்ட பயண ஏற்பாடுகள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்படும் என்றாா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் வெடித்த மாணவா்கள் போராட்டத்தால் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்மடைந்தாா். அவா் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை, சிறைத் தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில், அவரை வங்கதேசத்துக்கு நாடுகடத்துமாறு பிரதமா் தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசு இந்தியாவை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.