FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணிநேரத்தில் பதவி விலக வேண்டுமென சிஜேபி வலியுறுத்தல்...

24 செப்டம்பர் 2026, 4:42 pm IST
சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே - தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்... - கோப்புப் படம்
பகிர்:

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணிநேரத்தில் பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் பணிகள் குறித்து தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் 14 முறை ஆட்சேபம் எழுப்பியதாகவும்; ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டு தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்துள்ளதாகக் கூறி ஏராளமான எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து அவரைப் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணிநேரத்தில் பதவி விலக வேண்டுமெனவும்; இல்லையெனில், நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனவும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று (செப். 24) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

“48 மணிநேரத்திற்குள் ஞானேஷ் குமார் பதவியை ராஜிநாமா செய்யவில்லை என்றால், கரப்பான்பூச்சி மக்கள் கட்சி நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கும். ஞானேஷ் குமார் பதவி விலகும் வரையில் நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

நேற்று, தேர்தல் ஆணையம் குறித்த ஒரு அறிக்கை வெளியானது. அதன்மூலம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்த நாட்டின் மிகப் பெரிய துரோகி என்பது தெரியவந்துள்ளது. ஞானேஷ் குமார் இந்த நாட்டின் மிகப் பெரிய தேசவிரோதி, அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவர் இந்தியாவின் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்துள்ளார்.

இது ஜனநாயகமா? ஜனநாயகம் என்றால் என்ன? மக்கள் தங்களுக்கான அரசைத் தேர்ந்தெடுப்பார்கள், தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென மக்கள் முடிவு செய்வார்கள். ஆனால், ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றது முதல் யார் வாக்களிக்க வேண்டும், யார் வாக்களிக்கக் கூடாது என அரசு முடிவு செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இத்துடன், எஸ்ஐஆர் பணிகள் மூலம் மேற்கு வங்கத்தில் முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜியின் தொகுதியில் 50,000 வாக்குகள் நீக்கப்பட்டு அவர் தோற்கடிக்கப்பட்டதாகவும், தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டு அவர் தோற்கடிக்கப்பட்டதாகவும் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.

summary

The Cockroach Janata Party has demanded that Chief Election Commissioner of India Gyanesh Kumar resign within 48 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments