4 உயா்நீதிமன்றங்களுக்கு 12 கூடுதல் நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை!
உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றக் கொலீஜியம் பரிந்துரை பற்றி..
ஆந்திரம், கேரளம், உத்தரகண்ட், குவஹாட்டி ஆகிய நான்கு உயர்நீதிமன்றங்களுக்கு 12 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கு உச்ச நீதிமன்றக் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
தலைமை நிதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் விக்ரன் நாத் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய கொலீஜியம் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான பரிந்துரைக்கு அனுமதி அளித்தது.
ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் ஐந்து கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
செப். 23 அன்று நடைபெற்ற கூட்டத்தில், ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் நிரந்திர நீதிபதிகளாக நீதிபதி மகேஸ்வர ராவ் குஞ்சாம், நீதிபதி தூட்டா சந்திர தன சேகர், நீதிபதி சல்லா குணரஞ்சன், நீதிபதி அவதானம் ஹரி ஹரநாத சர்மா மற்றும் டாக்டர் நீதிபதி யாதவள்ளி லட்சுமண ராவ் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுகளுககு உச்ச நீதிமன்றக் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
கேரள உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, நீதிபதிகள் பி. கிருஷ்ண குமார், கே.வி. ஜெயக்குமார், முரளி கிருஷ்ணா எஸ்., ஜோபின் செபாஸ்டியன் மற்றும் பி.வி. பாலகிருஷ்ணன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளித்தது.
மேலும், கூடுதல் நீதிபதியாகப் பணியாற்றி வரும் நீதிபதி சுபாஷ் உபாத்யாயை உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கவும் ஒப்புதல் அளித்தது.
மற்றொரு தீர்மானத்தில், கூடுதல் நீதிபதியாக உள்ள நீதிபதி கௌசிக் கோஸ்வாமியை குவஹாட்டி உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கவும் ஒப்புதல் அளித்தது.
கொலீஜியம் பரிந்துரைத்துள்ளதாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.