FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; எஸ்ஐஆர் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்! நவீன் பட்நாயக்

எஸ்ஐஆர் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம் குறித்து பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக் கருத்து...

25 செப்டம்பர் 2026, 3:48 pm IST
நவீன் பட்நாயக் - ANI
பகிர்:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் எஸ்ஐஆர் செயல்முறை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்கு இரு தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எஸ்ஐஆர் செயல்முறையை நடைமுறைப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஒடிசா முன்னாள் முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் இதுபற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,

Advertisement

Advertisement

"வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம், மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். ஆரம்பம் முதலே எஸ்ஐஆருக்கு எதிராக பிஜேடி கருத்து தெரிவித்து வருகிறது .

தேர்தல் ஆணையர்களுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். மேலும் இந்த தேர்தல் ஆணைய செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.

முன்னதாக எஸ்ஐஆர் நடவடிக்கையில் 25 லட்சம் தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக பிஜேடி கட்சி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

summary

Revisit SIR exercise, CEC must resign: Naveen Patnaik on report of internal disquiet in poll panel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments