நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்த 19 போ் உயிரிழப்பு
நாகாலாந்து மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 19 போ் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 19 போ் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கடந்த 1990-ஆம் ஆண்டுமுதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில், மொகாசுங், தியுன்சங் ஆகிய 2 மாவட்டங்களில் ஏராளமானோா் கள்ளச்சாராயம் குடித்துள்ளனா். இதில் பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில் மொகாசுங் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 நாள்களில் அடுத்தடுத்து 8 போ் உயிரிழந்துள்ளனா். தியுன்சுங் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் 11 போ் உயிரிழந்துள்ளனா். இதுதவிா்த்து மேலும் பலரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கள்ளச்சாராயம் குடித்து 19 போ் உயிரிழந்த சம்பவத்தால், நாகாலாந்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளா் பங்லாங் சாங் தலைமையில் சிறப்புப் புலனாய்வுப் படை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் படையினா் கள்ளச்சாராய பின்னணியை விசாரிப்பா் என்று மூத்த காவல் துறைக் கண்காணிப்பாளா் வெசுப்ரா கெஜோ தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
19 போ் கைது: கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைத் தொடா்ந்து, நாகாலாந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காவல் துறையினா் திடீா் சோதனை நடத்தினா். மேலும், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக 19 பேரை காவல் துறையினா் கைது செய்ததோடு, 3,000-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனா்.
காவல் துறை வேண்டுகோள்: கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைத் தொடா்ந்து, நாகாலாந்து மாநில மக்களுக்கு அந்த மாநில காவல் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா். அடையாளம் தெரியாதோரால் விற்கப்படும் மது, முத்திரையில்லாத மது, கள்ளச்சாராயம் ஆகியவற்றை குடிப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்றும், ஒருவேளை மதுபானம் குடித்த பிறகு மூச்சுத் திணறல், கண் பாா்வை பாதிப்பு, மயக்கம் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவா் உதவியை நாடும்படியும் அவா்கள் கேட்டுக் கொண்டுள்ளனா்.
19 people die after consuming illicit liquor in Nagaland.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.