FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உலகின் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த களைக்கொல்லிக்கு இந்தியா தடை!

உலகின் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த களைக்கொல்லியான 'பாராகுவாட் டைகுளோரைடு' பயன்பாட்டிற்கு இந்தியா தடை விதித்துள்ளது.

பாராகுவாட் டைகுளோரைடு
பகிர்:

உலகின் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த களைக்கொல்லியான 'பாராகுவாட் டைகுளோரைடு' பயன்பாட்டிற்கு இந்தியா தடை விதித்துள்ளது.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் ஆபத்துகளைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த ரசாயனத்திற்கு தடை அல்லது கட்டுப்பாடு விதித்த 70 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

பூச்சிக்கொல்லிகள் சட்டம், 1968-ன் கீழ் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்யப்பட்டு, அந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பதிவுக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர் மத்திய அரசு இதற்கான தடை அறிவிப்பை வெளியிட்டது.

Advertisement

Advertisement

இந்த அறிவிப்பில், பதிவு செய்யப்பட்ட பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி உடனடியாகத் தடை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பூச்சிக்கொல்லிகள் சட்டம், 1968-ன் பிரிவு 9-ன் கீழ் வழங்கப்பட்ட அனைத்துப் பதிவுச் சான்றிதழ்களையும் இது ரத்து செய்கிறது.

முன்னதாக, ஜூலை 10 2026 அன்று விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், இந்தத் தடையை இறுதி செய்வதற்கு முன்னதாக 30 நாள்களுக்குள் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனைப் பயன்படுத்துவதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள், தங்கள் பதிவுச் சான்றிதழ்களைத் திரும்ப ஒப்படைக்கத் தவறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

பூச்சிக்கொல்லிகள் சட்டம் மற்றும் அதன் விதிகளுக்கு இணங்க இந்த உத்தரவைச் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகளவில் மிகவும் ஆபத்தான களைக்கொல்லிகளில் ஒன்றாக ’பாராகுவாட் டைகுளோரைடு' கருதப்படுகிறது. மிகக் குறைந்த அளவில் இதை உட்கொண்டால்கூட உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பாதிக்கும் இதன் நச்சுத்தன்மைக்கு மாற்று மருந்து எதுவும் இல்லை.

மத்திய வேளாண் அமைச்சரிடம் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் பூச்சிக்கொல்லி தொடர்பான 34,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதில் பூச்சிக்கொல்லியை உட்கொண்டு 26,921 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில், 7,821 பேர் தற்செயலான நச்சு பாதிப்பால் பலியாகியுள்ளனர்.

summary

India has banned the use of 'Paraquat Dichloride', the world's most toxic herbicide.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments