பாதுகாப்புப் படை வீரர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 4 பேர் சுட்டுக்கொலை!
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சக வீரர் ஒருவர் சுட்டதில் 4 வீரர்கள் பலியாகினர்.
ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் (மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை) முகாம் ஒன்றில், சக வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உதவி கமாண்டன்ட் மற்றும் சப் - இன்ஸ்பெக்டர் உள்பட 4 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹிமாசலப் பிரதேச எல்லைக்கு அருகே உள்ள மஷ்கா கிராமத்தில் அமைந்துள்ள 'சேவா-III' நீர்மின் திட்ட வளாகத்தில் இன்று (செப். 29) காலை இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
தலைமை காவலர் (கான்ஸ்டபிள்) அபிதேஷ் குமார் என்பவர், சக ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவர்களைத் துப்பாக்கியால் சுட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Advertisement
Advertisement
துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் சக ஊழியர்கள் அவரைப் பிடித்து, அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த வீரர்கள் உதவி கமாண்டன்ட் அங்கித் குமார் பாண்டே, சப்-இன்ஸ்பெக்டர் லக்ஷ்மன் சிங் மற்றும் காவலர்கள் ரஃபிக் அகமது, சந்தீப் குமார் என 4 பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சிஐஎஸ்எஃப் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக, தலைமைக் காவலர் அதேவேளையில், காவல்துறையினர் இது தொடர்பாக, அபிதேஷ் குமார் மீது வழக்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எதனால் வாக்குவாதம் ஏற்பட்டது? அதைத் தொடர்ந்து, நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கான சூழல் மற்றும் நோக்கம் என்னவென்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Four shot dead following an altercation among security force personnel
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.