FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிவன் ஏழைகளின் கடவுள்; ராமர் பணக்காரர்களின் கடவுள்! ரேவந்த் ரெட்டி பேச்சால் சர்ச்சை!

ராமர்-சிவன் குறித்த ரேவந்த் ரெட்டியின் சர்ச்சை பேச்சு குறித்து...

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி - கோப்புப் படம்
பகிர்:

ராமர் பணக்காரர்களின் கடவுள் என்றும், சிவன் ஏழைகளின் கடவுள் என்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இதற்கிடையில் ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சிவன் தொடர்பாகவும், ராமர் தொடர்பாகவும் சில கருத்துகளைத் தெரிவித்தார். அவருடைய இந்த கருத்துகள் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை பாஜகவினர் அடிக்கடி பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பிய ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் "ஏன் ஹர ஹர மகாதேவ்" என்று கூறுவதில்லை என்று கேள்வி எழுப்பினார்.

Advertisement

Advertisement

தென்னிந்தியாவைச் சேர்ந்த நாங்கள் திராவிடர்கள். அவர்கள் ஆரியர்கள். நாங்கள் சிவ பெருமானின் பக்தர்கள்.. அவர்கள் ராமரின் பக்தர்கள்.. பாஜக ராமரை தன்வசப்படுத்திக் கொண்டது. சிவன் ஏழைகளின் கடவுள், ராமர் பணக்காரர்களின் கடவுள் என்றும் அவர் கூறினார். ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்துகள் வடக்கு-தெற்கு அரசியலில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பாஜக கடும் எதிர்ப்பு

ரேவந்த் ரெட்டியின் இந்தக் கருத்துகளுக்கு மத்திய அமைச்சர் சஞ்சய் குமார் பாண்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராமர் மற்றும் சிவனுக்கு இடையே அரசியல் ரீதியான பிளவை உருவாக்க முதல்வர் முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதுதொர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

முஸ்லிம்கள் என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் முஸ்லிம்கள் என்று முன்பு கூறிய ரேவந்த் ரெட்டி, இப்போது ராமர் மற்றும் சிவனுக்கு இடையே அரசியல் எல்லைகளை வகுக்கிறார்.

வேமுலவாடாவில் தட்சிண காசியும் (தென் காசி), பத்ராசலத்தில் தட்சிண அயோத்தி'யும் (தென் அயோத்தி) அமைந்துள்ள தெலங்கானாவின் முதல்வராக

இருக்கும் ரேவந்த் ரெட்டிக்கு, ராமர் - சிவனை வடக்கு - தெற்கு என்று பிரித்துப் பார்ப்பது சரியல்ல என்பது தெரிந்திருக்க வேண்டும்.

மத மற்றும் பிராந்திய அடையாளங்களை வைத்து அரசியல் செய்வதையே காங்கிரஸ் வாடிக்கையாகக் கொண்டுள்ளதாகவும், இதைத் தான் இப்போது ரேவந்த் ரெட்டி செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments