FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என ராகுல் காந்தி பேச்சு...

இந்தியா கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி - PTI
பகிர்:

ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவதை எதிர்க்கட்சிகள் உறுதி செய்யும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருதலைபட்சமாக முடிவுகளை எடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டம் இன்று கூடி ஆலோசனை நடத்தியது.

தொடர்ந்து இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஒன்றிணைந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பேசியதாவது:

Advertisement

Advertisement

“இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் மிகச் சிறந்த விவாதம் நடைபெற்றது. வாக்குகள் திருடப்படுவது தொடர்பான விவகாரம் அனைவருடனும் கலந்தாலோசிக்கப்பட்டது.

பாஜக, நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் ஜனநாயக அமைப்பின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதை நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை. இந்திய ஜனநாயகத்தைச் சீர்குலைத்தவர்கள் தண்டிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். இது 'இந்தியா' கூட்டணித் தலைவர்கள் அனைவரின் தனிப்பட்ட உறுதிமொழியாகும். தவறு செய்தவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், யாராக இருந்தாலும், அது முக்கியமல்ல. இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிமனிதரையும் விட இந்திய ஜனநாயகம் மிகப்பெரியது.

தேர்தல்கள் திருடப்படுகின்றன என்பதையும், நரேந்திர மோடியும் அமித் ஷாவும் இந்திய ஜனநாயகத்தைச் சீர்குலைத்துவிட்டார்கள் என்பதையும் நாட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எதிர்க்கட்சிகள் வெற்றியைப் பெற்றுள்ளன.

குறிப்பாக இளைஞர்களிடையே ஒரு புதிய எதிர்ப்புணர்வு எழுந்துள்ளது. நாட்டில் நடப்பவை தவறானவை என்றும், அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

இந்திய அரசியலமைப்பின் கூட்டுப் பாதுகாவலர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள்தான் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

அடுத்த சில மாதங்களில் நாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நாங்கள் கொண்டு வருவோம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments