FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
குழந்தைகள் உலகம்

இது தெரியுமா? கடலின் ஆழமான பகுதியில் தரையை மனிதனால் தொட முடியுமா?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

Updated On : 16 ஜூலை 2026, 5:43 pm IST
கடல் - கோப்புப்படம்
பகிர்:

கடலின் ஆழமான பாகத்தின் தரையை மனிதனால் தொடுவிட முடியுமா? தொட்டிருக்கிறார்களா?

தொடமுடியும் என்றுதான் கூறுகிறார்கள். இதுவரை மனிதன் பெருங்கடல்களில் 35,858 அடி ஆழம் வரைதான் சென்றிருக்கிறான். இதற்கு மேல் ஆழமான பகுதி, 'சேலஞ்சர் டீப்' என்று அழைக்கப்படுகிறது. இது பசிபிக் பெருங்கடலில் உள்ளது. இதன் ஆழம் 10,904 மீட்டர்கள் (36,070 அடிகள்).

இவ்வளவு ஆழத்துக்குள் சென்றால் மனிதன் நீரின் அழுத்தத்தால் மூச்சுத் திணறி உயிரிழக்க நேரிடும். ஆனாலும் விடாமுயற்சி கொண்ட மனிதன் இதற்கும் முயற்சி செய்திருக்கிறான். 1960-ஆம் ஆண்டு ஆண்டு அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த டேன் வால்ஷ் என்பவரும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கடல் ஆராய்ச்சியாளரான ஜாக்விஸ் பிக்கார்ட் என்பவரும் இந்த சேலஞ்சர் டீப் பகுதியின் மிக ஆழமான பகுதியை அடைந்து, 20 நிமிடங்கள் வரை அங்கிருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கோளம் வாகனம் ஒன்றின் உதவியுடன் இந்தச் சாதனையைச் செய்தார்கள்.

கடந்த 2012-ஆம் ஆண்டு, டைட்டானிக் படத்தின் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூனும் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. மனிதனால் முடியாதது எதுவுமில்லை.

summary

Regarding rare information that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments