FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
குழந்தைகள் உலகம்

சிரி... சிரி... 26-07-2026

அவர் போலி கண் டாக்டர்னு எதைவச்சுச் சொல்றீங்க?

Updated On : 26 ஜூலை 2026, 4:11 am IST
பகிர்:

'அவர் போலி கண் டாக்டர்னு எதைவச்சுச் சொல்றீங்க?'

'படிக்கும்போது எழுத்துகள் தலை

கீழாகத் தெரியுதுன்னு சொன்னா... என்னையும் தலைகீழா உட்கார்ந்து படிக்கச் சொல்றாரு!'

Advertisement

Advertisement

-எம்.பி.தினேஷ், கோவை.



'காசை தண்ணி மாதிரி செலவு செய்யறாரே... யாருங்க அவர்?'

'மினரல் வாட்டர் கம்பெனி ஓனர்தான்!'

-குலசை நஜ்முதீன், மாம்பாக்கம்.



'டீ தானே குடிச்சேன்... பாயசம்னு பில் போடுறியே?'

'உங்க விருப்பப்படி ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் போட்டதில் அது பாயசமா மாறிடுச்சி, சார்!'

- பர்வதவர்த்தினி, பம்மல்.



'எங்க ஆபிஸ்ல கல்யாணம் ஆனவங்களுக்கு மட்டும்தான் வேலை கொடுப்பாங்க...'

'ஏன்?'

'அவங்கதானே வீட்டுக்குப் போகணும்கிற நினைப்பே இல்லாம வேலை செய்வாங்க!'



'என் மனைவி கணக்குல ரொம்ப வீக்!'

'அதான், கூட்டவோ பெருக்கவோ மாட்டேங்கிறா?'

-தீபிகா சாரதி, சென்னை.



'எங்க வீட்டில் எனக்குக் கல்யாணம் பண்ணி பழிவாங்கிட்டாங்க...'

'எப்படி?'

'ஆனி மாசம் கடைசி முகூர்த்தத்தில் கல்யாணம் செஞ்சு வச்சு, ஆடி மாசம் பிரிச்சுட்டாங்க!'



'நம்ம தலைவருக்கு வீட்டில் சப்பாத்தி செய்யத்தான் பிடிக்கும்.'

'ஏன் அப்படி?'

'அவர்தான் நல்ல உருட்டுவாரே!'



'காலையில் எழுந்தவுடன் மொபைல் பார்க்கக்கூடாது.'

'நல்ல தகவலா இருக்கே... எதில் பார்த்தே?'

'இன்னைக்குக் காலையில் மொபைலில்தான்!'



'இன்னைக்கு நீ போட்ட காபியை நாய் குடிக்காது...'

'அதான், நம்ம வீட்டு நாய்க்கு தனியாக ஹார்லிக்ஸ் போட்டு வைத்திருக்கிறேன்!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'ரியல் எஸ்டேட்காரர் எங்க ஊருக்கு ஒரு மின்மயானம் கட்டிக் கொடுத்திருக்கார்..!'

'அதுக்காக ஊர் எல்லையில 'புத்தம்புது மின் மயானம் உங்களை இனிதே வரவேற்கிறது!' ன்னு போர்டு வைக்கணுமா என்ன?'



'டிப்ளமோ காபியா... அப்படின்னா என்னப்பா?'

'டிகிரி காபிக்கு அடுத்த குவாலிட்டி, சார்!'



'விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போனதில்லைன்னு தலைவர் சொல்றாரே?'

'கொள்கைகளை விட்டுக்கொடுத்துட்டு கோடி

களைக் குவிச்சிருக்காருல்ல...'



'உங்க மனைவிக்குக் கொழுப்பு ரொம்ப அதிகமா இருக்கு, சார்!'

'ஏன் டாக்டர்... ஏதாவது தப்பாப் பேசிட்டாளா?'



'தலைவரைப் பார்த்து கழைக்கூத்தாடி பிரமிச்சுப் போய் நிக்கறானே..?'

'தலைவர் அடிக்கிற பல்டிகளைப் பார்த்து அவனே மிரண்டு போயிட்டானாம்!'



'சரியான தகடுதத்த பேர்வழிங்க அவரு...'

'ஏன் அப்படிச் சொல்றீங்க?'

'சூரிய மின்தகடு அமைக்கிறதுல பெரிய அளவுல ஃபிராடு பண்ணிட்டாரு!'



'அந்தத் தலைவர் பேசறதே புரியமாட்டேங்குது.'

'ஏன்... இங்கிலீஷ்ல பேசினாரா?'

'பேசினது ஏதாவது புரிஞ்சால்ல அது இங்கிலீஷா? தமிழா?ன்னு சொல்லமுடியும்!'

-வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments