சொல்லாதே...
'நேரம் இல்லை' சொல்லியே நீயும் சோம்பித் திரியாதே!
'நேரம் இல்லை' சொல்லியே
நீயும் சோம்பித் திரியாதே!
'வேலை இல்லை' சொல்லியே
Advertisement
Advertisement
வெற்றுப் பயலாய் ஆகாதே!
-
'பொறுமை இல்லை' சொல்லியே
பொங்கி வீண் ஆக்காதே!
'வாய்ப்பு இல்லை' சொல்லியே
வாழ்வில் தாழ்ந்து போகாதே!
-
'யாரும் உதவவில்லை' சொல்லியே
யாசகத் தட்டை ஏந்தாதே!
'எரிச்சலா வருது' சொல்லியே
எண்ணம் தாழ்ந்து போகாதே!
-
'புரியவே இல்லை' சொல்லியே
புத்தகத்தை மூடி வைக்காதே!
'தெரியவே இல்லை' சொல்லியே
தேர்வில் தேறாமல் போகாதே!
-வசீகரன், தேனாம்பேட்டை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.