சிரி... சிரி... | 29-11-2026
'இந்த டாக்டர் ஆபரேஷனுக்கு ரொம்ப கம்மியா ஃபீஸ் வாங்கறாராமே..?'
'இந்த டாக்டர் ஆபரேஷனுக்கு ரொம்ப கம்மியா ஃபீஸ் வாங்கறாராமே..?'
'ஆமாம், 'டெட்' சீப்!'
Advertisement
Advertisement
'அவரை அப்பாவின்னு ஏன் சொல்றே?'
'ஃபேஸ் 'புக்' மொத்தம் எத்தனை பக்கங்கள்னு கேக்கறாரே..?!'
பர்வீன் யூனுஸ், சென்னை.
'டியர்... என்னுடைய கவிதை எப்படி?'
'நெட்ல பார்த்து எழுதுனீயா... இதே கவிதையை நாலுபேர் என்கிட்ட காமிச்சிருக்காங்களே?!'
-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
'நீ திருட்டைக் கைவிடுறதா இருந்தா சொல்லு... உனக்கு நான் ஒரு வேலை வாங்கித் தர்றேன்...!'
'பாங்க் வேலைங்களா எசமான்?'
வி.ரேவதி, தஞ்சை.
'நம்ப தெரு ராப்பிச்சைகூட டிவி சீரியல்ல வர்ற மாதிரி பண்றான்...'
'எப்படி?'
'வேற ஓர் ஆளைக் கூட்டிக்கிட்டு வந்து, 'நாளையிலேருந்து எனக்குப் பதிலா இவரு வருவாரு'ன்னு காண்பிச்சுட்டுப் போறான்!'
'மூச்சுவிட ரொம்ப கஷ்டமா இருக்கு, டாக்டர்!'
'கவலைப்படாதீங்க... என் பீஸைக் கேட்டா பெருமூச்சே விடுவீங்க!'
-தீபிகா சாரதி, சென்னை -5.
'தலைவலின்னு வந்த எனக்கு இப்ப தலைச்சுற்றல் வந்துடுச்சு, டாக்டர்...'
'தலைவலி போயிடுச்சில்ல... அதைச் சொல்லுங்க, சார்?'
வி.ரேவதி, தஞ்சை.
'வழக்குகளுக்காக நான் கட்சி மாறவில்லை; கட்சி மாறுவது என் வழக்கம் என்பதால்தான் என்பதை ...!'
வி.ரேவதி, தஞ்சை.
'மாமனாரை தெய்வம்னு சொல்றீங்களே... அப்ப மாமியார்?'
'தெய்வத்தின் தெய்வம்!'
- வி.ரேவதி, தஞ்சை.