FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நீதிக் கதைகள்! கை தட்டும் போட்டி!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

58 வினாடிகள் முன்பு
நீதிக் கதைகள்! கை தட்டும் போட்டி! - படம்: சிறுவர் மணி
பகிர்:

ஒரு அரசர். அவர் தனது நாட்டில் கை தட்டும் போட்டி ஏற்பாடு செய்திருந்தார்கள்! யார் நீண்ட நேரம் கை தட்டுகிறார்களோ அவர்களுக்கு பெரும் பரிசு கொடுப்பதாக அறிவித்திருந்தார்கள்.

ஏராளமான பேர் போட்டியில் கலந்து கொள்ள அரச சபையில் கூடிவிட்டனர். சபை குதூகலமாக இருந்தது! பின்னே!...நல்ல நிகழ்ச்சிக்குக் கை தட்டுவார்கள்! கை தட்டுவதே நிகழ்ச்சியாயிற்றே!

குறித்த நேரத்தில் போட்டி ஆரம்பித்தது. எல்லோரும் அமர்ந்துகொண்டு கை தட்ட ஆரம்பித்தார்கள்! சிறிது நேரம் சென்றது! நேரம் செல்லச் செல்ல அனைவரும் ஓய்ந்து போனார்கள். கைதட்டல் ஒலி குறைந்து கொண்டே வந்தது. அனேகமாக எல்லோரும் கை தட்டுவதை நிறுத்தி விட்டார்கள். ஒரே ஒரு இடத்தில் மட்டும் கை தட்டல் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது!

Advertisement

Advertisement

அந்த ஒரு கை தட்டல் ஒலி தவிர வேறு ஒலியே இல்லை! அரசருக்கு ஆச்சரியமாக இருந்தது. யார் தட்டுவது என்பதை கூட்டத்தில் பார்க்கமுடிவில்லை. அரசர் கைதட்டுபவரை எழுந்திருக்கச் சொன்னார்.

அப்போது இருவர் எழுந்து நின்றனர்! அனைவருக்கும் ஆச்சரியம்! ஆமாம்!.....அந்த இருவரில் ஒருவருக்கு இடது கை இல்லை! மற்றொருவருக்கு வலது கை இல்லை!.... இருவரும் சேர்ந்தே கை தட்டியிருக்கின்றனர்!.... இருவருக்கும் தங்களுக்கு ஒரு கை இல்லாத நிலையிலும் கை தட்டும் போட்டியில் கலந்து கொண்டார்கள்!

அவர்கள் மனதில் இருந்த தன்னம்பிக்கைதான் இந்த அசுர சாதனையை செய்ய வைத்தது!

அவர்களை அரசர் அருகில் அழைத்து, பெரும் தொகையைப் பரிசளித்து, "எப்படி இது உங்களால் முடிந்தது?" என்று வினவினார்.

"மன்னா, வெற்றி, அல்லது தோல்வி என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்திக்கவில்லை. இந்தப் போட்டியில் மகிழ்ச்சியோடு கலந்து கொள்ளவே வந்தோம்!.....உற்சாகத்தோடு கலந்து கொண்டோம்!....கடவுள் அருளால் வெற்றியும் கிட்டியது!...." என்றனர்.

அவர்கள் அளித்த அந்த பதிலுக்கு, கைகள் ஓய்ந்த நிலையிலும் சபையில் பலத்த கைதட்டல் சப்தம் கேட்டது!.....மன்னரும் சேர்ந்து கை தட்டினார்!இருவரும் தங்கள் கைகளை இணைத்து சபையை நமஸ்கரித்தனர்!

summary

A moral story that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments