முகப்பு
தற்போதைய செய்திகள்

போளூர் அருகே யானை மிதித்து முன்னாள் ராணுவவீரர் சாவு

போளூர், பிப்.17: போளூர் அருகே மங்களாபுரம் என்னும் இடத்தில் காட்டு யானை மிதித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் பலியானார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஏழுமலை (வயது 52). இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உ

Updated On : 20 செப்டம்பர் 2012, 4:42 am IST
பகிர்:

போளூர், பிப்.17: போளூர் அருகே மங்களாபுரம் என்னும் இடத்தில் காட்டு யானை மிதித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஏழுமலை (வயது 52). இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இன்று அதிகாலை தோட்டத்தில் நீர் பாய்ச்சுவதற்காக டார்ச் லைட் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். சந்தவாசல் வனச்சரகத்தைச் சேர்ந்த அந்தப் பகுதியில் இவரது டார்ச் லைட் வெளிச்சத்தைக் கண்டு அங்கே வந்த காட்டு யானை ஒன்று அவரைத் தாக்கியுள்ளது. இதில் அவர் உயிரிழந்தார்.

யானை மிதித்து முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பலியானது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments