போனஸ் பிரச்சினை: 2 முறையாக சாலைமறியலில் ஈடுபட்ட விசைத்தறித் தொழிலாளர்கள் 119 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் தீபாவளி போனஸ் கோரி விசைத்தறிóத் தொழிலாளர்கள் 2 வது தடவையாக புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்ட 52 பெண்கள் உள்ளிட்ட
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் தீபாவளி போனஸ் கோரி விசைத்தறிóத் தொழிலாளர்கள் 2 வது தடவையாக புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்ட 52 பெண்கள் உள்ளிட்ட 119 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவிலில் விசைத்தறி மற்றும் அது தொடர்பான தொழிலில் சுமார் 10ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த ஆண்டு தீபாவளி போனஸ் தொகையாக ரூ.1500 வழங்கப்பட்டது. நிகழாண்டில் தறிக்கு ரூ 2500 போனஸ் கோரி விசைத்தறிó பேக்டரி தொழிலாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்,பேரணி,ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் கடந்த 22ம் தேதி முதல் நடந்த பலகட்டப் பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் செவ்வாய்கிழமை விசைத்தறி பேக்டரி தொழிலாளர்கள் சங்கத்தினர் 3 கட்டப் போராட்டத்தை அறிவித்தனர்.
Advertisement
Advertisement
அதன்படி புதன்கிழமை முற்பகலில் விசைத்தறி பெண் தொழிலாளர்கள் திருவள்ளுவர்சாலையில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு பேருந்துநிலையம் முன்பு வந்தனர்.அங்கு சாலையில் அமர்ந்து சிறிதுநேரம் மறியலில் ஈடுபட்டனர்.இதில் சங்கச் செயலர் ஏ.மாடசாமி,ஆர்.ஆர்.சக்திவேல்,ப.திருவுடையான்,ரத்னவேல்,சக்திவேல், மாதர் சங்கத்தைச் சேர்ந்த லெட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 52 பெண்கள் உள்ளிட்ட 119 பேரை போலீசார் கைது செய்தனர்.
வியாழக்கிழமை மீண்டும் ஆண்,பெண் விசைத்தறித் தொழிலாளர்கள் பேரணியாகச் சென்று பேருந்துநிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.அதன்பிறகும் போனஸ் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படவில்லையெனில் நவ.2ம் தேதி தீபாவளி தினத்தில் திருவேங்கம்டம்சாலையில் விசைத்தறித் தொழிலாளர்கள் வாழை இலையையும்,கருப்புக்கொடியையும் ஏந்தி போராட்டம் நடத்துகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.