முகப்பு
தற்போதைய செய்திகள்

சங்கரன்கோவிலில் சாலையில் பதிந்த லாரி:போக்குவரத்து பாதிப்பு

சங்கரன்கோவில் பிரதானசாலையில் குடிநீர் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழி சரியாக செப்பனிடாததால், புதன்கிழமை கற்கள் ஏற்றி வந்த லாரி சாலையில் பதிந்தது.இதனால் சுமார் 1 மணி நேரம்

Updated On : 22 ஜனவரி 2014, 6:22 pm IST
பகிர்:

சங்கரன்கோவில் பிரதானசாலையில் குடிநீர் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழி சரியாக செப்பனிடாததால், புதன்கிழமை கற்கள் ஏற்றி வந்த லாரி சாலையில் பதிந்தது.இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சங்கரன்கோவில் வழியாக ராஜபாளையத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் ராஜபாளையம் நகராட்சி தாமிரபரணிக் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனால் நகரின் பிரதானசாலையில் குழி தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டு வருகிறது.குழாய் பதிக்கப்பட்டு முடிந்ததும் சாலையை சரியாக மூடி செப்பனிடாமல் இருப்பதால், ஆங்காங்கே குழி ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பிரதானசாலையில் (கச்சேரிசாலை) புதன்கிழமை மாலை சுமார் 3 மணியளவில் கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென்று சாலையில் பதிந்தது.இதனால் லாரி சாய்ந்து அதிலிருந்த கற்கள் மளமளவென கீழே விழுந்தது.

Advertisement

அப்போது லாரியையொட்டி மூன்று சக்கர சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண் மாலையம்மாள் மீது கற்கள் விழுந்தது.உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் லாரியை குழிக்குள் இருந்து மீட்க பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்டது.லாரியில் இருந்த கற்கள் அனைத்தும் அகற்றப்பட்டதும் குழிக்குள் விழுந்த லாரியை வெளியே எடுத்தனர்.

குழிதோண்டிய பிறகு சாலையை சரியாக மூடி செப்பனிடாததே தொடர்ந்து ஏற்படும் விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.