FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மதிமுகவுக்கு ஆதரவு கேட்டேன்; எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றார் அழகிரி: வைகோ

மதுரை சத்ய சாய் நகரில் உள்ள அழகிரி வீட்டுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ, ஞாயிறு இன்று காலை 9.30 மணி அளவில் வந்திருந்தார். அழகிரி வீட்டுக்கு அவர் வருவதாகத் தகவல் தெரிந்ததும், அழகிரி வீட்டின் முன் இரு தரப்பு ஆதரவாளர்களும் பெருமளவில் குவிந்திருந்தனர்.  சுமார் அரை மணி நேரம் அழகிரியுடன் ஆலோசனை நடத்தினார் வைகோ.

Updated On : 23 மார்ச் 2014, 11:53 am IST
பகிர்:

மதுரை சத்ய சாய் நகரில் உள்ள அழகிரி வீட்டுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ, ஞாயிறு இன்று காலை 9.30 மணி அளவில் வந்திருந்தார். அழகிரி வீட்டுக்கு அவர் வருவதாகத் தகவல் தெரிந்ததும், அழகிரி வீட்டின் முன் இரு தரப்பு ஆதரவாளர்களும் பெருமளவில் குவிந்திருந்தனர்.  சுமார் அரை மணி நேரம் அழகிரியுடன் ஆலோசனை நடத்தினார் வைகோ.

பின்னர் வெளியில் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசியபோது,

அண்மையில் மதுரையில் இருந்து ஒரே விமானத்தில் பயணம் செய்தபோது, இருவரும் பேசி அன்பைப் பரிமாறிக் கொண்டோம். அப்போது மதிமுகவுக்கு ஆதரவு தருமாறு அவரிடம் வேண்டுகோள் வைத்தேன். அவரும் எங்கள் வீட்டுக்கு வாங்களேன் என்று அழைப்பு விடுத்தார். அதன்படி, ஞாயிறு இன்று காலை அவரது வீட்டுக்கு வந்து அவரை சந்தித்தேன்.

Advertisement

Advertisement

இருவரும் பழைய நினைவுகளை பரிமாறிக் கொண்டோம். இருவருமே பழைய திரைப் படப் பாடல்களை ரசித்துக் கேட்போம். அழகிரி பழைய படப்பாடல்கள் கேட்பதில் விருப்பம் உடையவர். 

இருவரும் ஏற்கெனவே பழைய பாடல்கள் சிடிக்களை பரிமாறிக் கொள்வோம். நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, செங்கிஸ்கான் சிடி வாங்கி வந்து அவரிடம் கொடுத்தேன்.

1993ல் கடைசியாக நான் அவர் வீட்டில் சந்தித்ததை நினைவு கூர்ந்தார் அழகிரி. இருவரும் பழைய நினைவுகளைக் கூறி அன்பைப் பரிமாறிக் கொண்டோம்

வரவுள்ள மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடும் விருதுநகர் தொகுதி உள்ளிட்ட மதிமுக போட்டியிடும் ஏழு தொகுதிகளிலும் ஆதரவு தருமாறு கோரினேன். அவரும் வாழ்த்து தெரிவித்து, எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றார்.

-இவ்வாறு கூறினார் வைகோ. அப்போது, செய்தியாளர்கள், அழகிரி உங்களுக்கு ஆதரவு தருவதாக கூறினாரா என்று கேட்டதற்கு, எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றால் அதுதானே அர்த்தம்.. என்று பதிலளித்தார் வைகோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments