FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

நடுக்கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள் 4 பேர் மீட்பு

நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நால்வரை கடற்படையினர் மீட்டு காரைக்கால் கொண்டுவந்தனர்.

Updated On : 30 ஜனவரி 2015, 5:45 pm IST
பகிர்:

நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நால்வரை கடற்படையினர் மீட்டு காரைக்கால் கொண்டுவந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் வினோத், சுப்புரத்தினம் மகன் சக்திமயில், செல்லதுரை மகன் சுந்தரவேல், கோவிந்தராஜ் மகன் பூபாலன் ஆகியோர் வினோத் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் வெள்ளிக்கிழமை அதிகாலை கடலுக்கு சென்றனர்.

கோடியக்கரையிலிருந்து சுமார் 7 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது படகு பழுதாகி நின்றுவிட்டது. அப்பகுதியில் வேறு மீன்பிடிப்புப் பணியில் யாரும் ஈடுபடாததால் நடுக்கடலில் தத்தளிக்க நேரிட்டது. அதிலிருந்தோர் 1093  என்ற கடலோரக் காவல்படை தொடர் எண்ணுக்கு விவரத்தை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

 காரைக்காலில் உள்ள கடலோரக் காவல்படை மையத்தாரின் உத்தரவின்படி,  கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல்படைக்கு சொந்தமான 427 என்ற ரோந்துப் படகு அப்பகுதிக்கு விரைந்து சென்றது.

நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் கடலோரக் காவல்படையினர் மீட்டனர். இவர்களது படகை, ரோந்துப் படகில் கட்டி காரைக்கால் மார்க் துறைமுகத்துக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் கொண்டுவந்தனர். கடலோரக் காவல்படை கமாண்டன்ட் உதல்சிங் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது படகு பழுதாகி நின்றுவிட்டது குறித்து அதிகாரிகளுக்கு மீனவர்கள் விளக்கினர். விசாரணைக்குப் பிறகு மீனவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments