முகப்பு
தற்போதைய செய்திகள்

வத்தலகுண்டு அருகே சாலை விபத்து: 2 பேர் பலி

சிவகங்கை மாவட்டம் துவரக்குறிச்சியை சேர்ந்த 9 பேர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகிலுள்ள குலதெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிட டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்றனர்.

Updated On : 30 ஜனவரி, 2015 at 11:03 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:02 AM

சிவகங்கை மாவட்டம் துவரக்குறிச்சியை சேர்ந்த 9 பேர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகிலுள்ள குலதெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிட டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்றனர்.

அந்த வாகனம் நத்தம் வத்தலகுண்டு வழியாக வரும் போது ஒரு பள்ளி வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் டாட்டா ஏஸ் வாகனத்தில் வந்த 2 பேர் பலியாயினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 5 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் 2 பேர் தேனி அரசுக் கல்லூரி மருத்தவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வேன் குழந்தைகளை ஏற்ற சென்ற போது இந்த விபத்து நேர்ந்ததால் வேனில் யாரும் இல்லை. வேன் டிரைவரும் அதிர்ஷடவசமாக தப்பினார். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.