திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தவர் தீகுளிக்க முயற்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அடுத்துள்ள கே. ராஜதானி கோட்டையை சேர்ந்த எஸ். முத்துராமலிங்கம் என்பவரது தந்தை எம். சுப்பையா, இவருக்கு சொந்தமான 1.11 ஏக்கர் நிலம் அந்த பகுதியில் உள்ளது. அந்த நிலத்தை 1986ம் ஆண்டு சுப்பையா வாங்கியுள்ளார்.

இதனிடையே கடந்த 2004ம் ஆண்டு பக்கத்து தோட்டத்தில் நடந்த பாகப் பிரிவினையின் போது சுப்பையாவின் நிலத்தை கவிதா என்பவருக்கு போலி பத்திரம் தாயார் செய்து கொடுத்து விட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி முத்துராமலிங்கம் தரப்பினர். பல முறை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மனமுடைந்த முத்துராமலிங்கம் இன்று மாவாட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்து வருகிறார்கள்
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.