காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவராக தாரகை கத்பர்ட் நியமனம்!
காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவராக தாரகை கத்பர்ட் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...
தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவராக குளச்சல் தொகுதியின் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடத்தில் வெற்றிபெற்று, ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தபோது, 5 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்தது. மேலும், விசிக, ஐயூஎம்எல், இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை ஆதரவு தர, தவெக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்தது.
இதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கூட்டணிக் கட்சிகளை அமைச்சரவையிலும் இடம்பெறச் செய்தது.
Advertisement
Advertisement
ஆகையால், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக இருந்த ராஜேஷ்குமார், தமிழக அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் காரணமாக, தற்போது இந்த சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டு, தாரகை கத்பர்ட் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் துணைத் தலைவராக மயிலாடுதுறை தொகுதி எம்.எல்.ஏ ஜமால் முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் சட்டப்பேரவை குழுச் செயலராக டி.டி. பிரவீனை நியமித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் குளச்சல் தொகுதியில் போட்டியிட்ட தாரகை கத்பர்ட் 62,210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Tharagai Cuthbert, the MLA for the Colachel constituency, has been appointed as the leader of the Tamil Nadu Congress Legislature Party.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.