ஊழல் வழக்கு: ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் வீடுகளில் சி.பி.ஐ அதிரடி சோதனை
வருவாய்க்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீது புகார் எழுந்ததையடுத்து அவரது வீடுகளில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
வருவாய்க்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீது புகார் எழுந்ததையடுத்து அவரது வீடுகளில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஹிமாச்சல பிரதேச மாநில முதல்வராக இருப்பவர், வீரபத்ர சிங். இவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வந்த புகார்களை தொடர்ந்து இன்று காலை முதல் வீரபத்ரசிங் வீடுகளில், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறார்கள். வீரபத்ரசிங்கின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை காலை முதல் தொடர்ந்து நடந்துவருகிறது.
வீரபத்ரசிங்கின் தனிச்செயலாளரிடமும் அமலாக்கப்பிரிவு விசாணை நடத்தி வருகிறது. வீரபத்ரசிங்கிற்கு சொந்தமான இடங்களில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.