கொச்சியில் விமான சேவை மீண்டும் தொடங்கியது
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. கொச்சி கடற்படை
கொச்சி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. கொச்சி கடற்படை விமானதளத்தில் வணிக ரீதியிலான விமானம் தரையிறங்கியது.
கேரளத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 5,645 நிவாரண முகாம்களில் இதுவரை 7.24 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 8-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மழைக்கு 210 பேர் பலியாகியுள்ளனர். மேலும், வெள்ளம் சூழ்ந்த பல பகுதிகளிலிருந்து பெரும்பாலானோர் மீட்கப்பட்டுவிட்டதாகவும், இனி அவர்களது மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபடவுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
வெள்ளம் உள்புகுந்ததன் காரணமாக மாநிலத்தின் முக்கிய விமான நிலையமான, கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளதால், வரும் சனிக்கிழமை (ஆக 18) வரை விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்படுவதாகவும், தற்காலிகமாக கொச்சியில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. கொச்சி கடற்படை விமானதளத்தில் வணிக ரீதியிலான விமானம் தரையிறங்கியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.