பாக்தாத்தில் ஆயுத கிடங்கில் குண்டுவெடிப்பு: 14 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சதர் மாவட்டத்தில் ஷியா மசூதி அருகே ஆயுத குழு ஒன்று வீடு ஒன்றில்
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சதர் மாவட்டத்தில் ஷியா மசூதி அருகே ஆயுத குழு ஒன்று வீடு ஒன்றில் ஆயுதங்களை சேமித்து வைத்து ஆயுத கிடங்காக பயன்படுத்தி வந்துள்ளது.
இந்நிலையில், ஆயுத கிடங்கில் உள்ள ஆயுதங்கள் திடீரென வெடித்து சிதறியுள்ளன. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் அருகில் இருந்த ஐந்து வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
இதையடுத்து வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.