FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அழகிரி கூட்டிய அமைதிப்பேரணி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

அழகிரி தலைமையில் நடைபெற்ற பேரணி தமிழக அரசியலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது என்று மத்திய

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:


திருச்சி: அழகிரி தலைமையில் நடைபெற்ற பேரணி தமிழக அரசியலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது என்று மத்திய இணையமைச்சர் பொண்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாஜக சொல்வதை வைத்துதான் அரசியல் செய்ய வேண்டிய நிலை தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மற்ற கட்சிகளை கட்டுப்படுத்தியுள்ளது. அழகிரி தலைமையில் நடைபெற்ற அமைதிப்பேரணி தமிழக அரசியலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றார். 

குட்கா ஊழல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிஜிபி தே.க.ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் ஆகியோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை முதல் சோதனை மேற்கொண்டு வருது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு, தமிழகத்தில் நடைபெற்ற சிபிஐ மற்றும் வருமான வரித்துறை சோதனைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments