முதல்வர்களுக்கு மட்டுமே மெரினாவில் நினைவிடம், முன்னாள் முதல்வர்களுக்கு கிடையாது: எஸ். குருமூர்த்தி!
மெரினாவில் முதல்வராக இருக்கும் போதே மரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மட்டுமே அங்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்கக் கூடாது. இந்த விஷயத்தை திமுகவினர் தேவையில்லாமல் அரசியலாக்கக் கூடாது. அவருக்கு மெரினாவில் இடமளிப்பது நடைமுறையில் இல்லை.
முதல்வராக இருக்கும்போதே மரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமே மெரினாவில் இடமளிக்கப்பட்டுள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மட்டுமே அங்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால் கருணாநிதிக்கு அங்கு இடமளிக்க முடியாது.
முன்னாள் முதல்வர்களுக்கு காந்தி மண்டபத்திலேயே இடமளிக்கப்படுவது வழக்கம். காமராஜர், ராஜாஜி ஆகியோருக்கு மெரினாவில் இடமளிக்கப்படவில்லை. அதனால் கருணாநிதிக்கும் மெரினாவில் இடமளிக்க கூடாது என துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.