முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆர்க்காடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முகக் கவசங்கள்

ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில் ஆர்க்காடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள்,  செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள், பணியாளர்களுக்கு முகக் கவசங்கள்... 

Updated On : 29 ஏப்ரல் 2020, 2:27 pm IST
பகிர்:

ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில் ஆர்க்காடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள்,  செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள், பணியாளர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

ஸ்ரீ ராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளையின் செயலாளர் சிவலிங்கம் தலைமையில் அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் வெங்கடேசன்,  ரெட்கிராஸ் சங்க மாநில கருத்தாளர் கிருபானந்தன் ஆகியோர் முன்னிலையில் ஆரம்ப சுகாதார நிலைய  மருத்துவ அலுவலர் ஜெயப்பிரகாஷ் அவர்களிடம் 200 முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஆர்க்காடு முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சுரேஷ்,  அறக்கட்டளை உறுப்பினர் புகழேந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments