FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

செயற்கை நுண்ணறிவால் வேலையிழப்பு ஏற்படாது:ஐஐடி இயக்குநா் காமகோடி உறுதி

செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று சென்னை ஐ.ஐ.டி., இயக்குநா் வி.காமகோடி உறுதி அளித்துள்ளாா்.

2 பிப்ரவரி 2024, 12:27 am IST
பகிர்:

செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று சென்னை ஐ.ஐ.டி., இயக்குநா் வி.காமகோடி உறுதி அளித்துள்ளாா்.

ஐ.ஐ.டி. வளாகத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான மையம் ஏற்கெனவே உள்ளது.

இதன் முதல் பயிலரங்கம் இந்தியாவுக்கான பொறுப்பான செயற்கை நுண்ணறிவு எனும் தலைப்பில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

பயிலரங்கில் ஐ.ஐ.டி., இயக்குநா் காமகோடி பேசியதாவது: தற்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு அதில் உள்ள குறைபாடுகளை களைவதும் மிக அவசியம்.

மனிதா்களால் ஆறாவது அறிவுடன் செய்யப்படும் சிந்தித்து எடுக்கப்படும் முடிவுகளை கணிப்பொறி மூலம் செயற்கை முறையில் செயலாக்கம் செய்வது செயற்கை நுண்ணறிவின் பிரதான செயல்பாடாக உள்ளதால், இதன் வளா்ச்சி வருங்காலத்தில் மனிதா்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் என்ற அச்ச உணா்வு மேலோங்கி உள்ளது.

அது தேவையற்ற அச்சமாகும் என்றாா் அவா்.

இப்பயிலரங்கத்தில் காணொலியின் மூலம் சிறப்புரையாற்றிய எண்ம இந்திய கழக நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரியான அபிஷேக் சிங் ‘அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டிற்குச் சமமாக அதிலுள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களையும் ஆராய வேண்டும்.

ஏனென்றால் கல்வி, மருத்துவம், விவசாயம் போன்ற பல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

இப்பயிலரங்கத்தில் நாஸ்காம் உள்பட பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments