FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

ரிஷப் பந்த்துக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு ஷேன் வாட்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Updated On : 1 ஏப்ரல் 2024, 4:01 pm IST
ரிஷப் பந்த் - படம் | ஐபிஎல்
பகிர்:

தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு ஷேன் வாட்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இந்த ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த 51 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்த நிலையில், ரிஷப் பந்த்தை பார்த்து ஒருவர் ஊக்கம் பெறவில்லையென்றால், அவர்கள் உண்மையில் மனிதர்களாகவே இருக்க முடியாது என ஷேன் வாட்சன் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

Advertisement

ஷேன் வாட்சன் (கோப்புப்படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த்தின் ஆட்டம் ஊக்கம் அளிக்கும் விதமாக இந்தது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. கார் விபத்துக்குப் பிறகு அவருக்கு ஏற்பட்ட காயங்களைக் கடந்து சிறப்பாக விளையாடியது நம்பமுடியாத விதமாக உள்ளது. ரிஷப் பந்த்தினை பார்த்து நீங்கள் ஊக்கம் பெறவில்லையென்றால், உண்மையில் நீங்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments