முகப்பு
தற்போதைய செய்திகள்

கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள்...!

கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 9 ஏப்ரல் 2024, 2:11 pm IST
பகிர்:

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றன.

அதன்பின், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ பட வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இது கார்த்தியின் 25-வது படமாகும்.

தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வந்தார்.

Advertisement

Advertisement

இப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிகர் சத்யராஜும், முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் ராஜ்கிரணும் நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இப்படத்திற்கு ‘வா வாத்தியாரே’ என தலைப்பிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இப்படம் கார்த்தியின் 26-வது படமாகும்.

இந்த நிலையில், 96 வது பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி 27வது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அரவிந்த்சாமி பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.

இதனைத் தொடர்து, சர்தார் -2 ஆம் பாகத்திலும், மாரிசெல்வராஜ் இயக்கத்திலும் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments