ராகுல், பிரியங்கா கேரளம் வந்தடைந்தனர்
கேரள மாநிலம் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ஆகியோா் வியாழக்கிழமை (ஆக. 1) காலை 10.30 மணியளவில் கேரளம் வந்துள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ஆகியோா் புதன்கிழமை மேற்கொள்ள இருந்த பயணம் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவா்கள் வியாழக்கிழமை (ஆக. 1) காலை 10.30 மணியளவில் கண்ணூர் விமான நிலையம் வந்தனர்.
வயநாட்டில் தொடா்மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 275-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, ராகுல், பிரியங்கா ஆகியோா் புதன்கிழமை அங்கு பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வயநாட்டில் தொடா்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக அவா்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. மாநில முதல்வர் பிரனாயி விஜயனும் மீட்புப் படையினர் தவிர வேறு யாரும் வயநாடு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ஆகியோா் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் கண்ணூர் விமான நிலையம் வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கார் மூலம் வயநாடு புறப்பட்டு சென்றனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவா்களுக்கு ஆறுதல் கூறுகின்றனா். மேலும், தற்காலிக முகாமாக செயல்படும் அரசுப் பள்ளிக்குச் சென்று பாதிக்கப்பட்டவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர். மேலும் மேப்பாடி பகுதி மக்களை சந்தித்தும் ஆறுதல் கூறயுள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
கடந்த மக்களவைத் தோ்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அங்கு இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் பிரியங்கா போட்டியிடுவாா் என்று தகவல்கள் வெளியானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.