வெளியானது வாழை படத்தின் டிரைலர்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன் - திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மாமன்னன் படத்துக்கு அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.
இந்தப் படம் ஆக.23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Advertisement
Advertisement
சிறார்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா போன்றோரும் நடித்துள்ளனர்.
முன்னதாக, இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், வாழை படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.