பரமத்திவேலூரில் பிரபல புத்தகக் கடையில் தீ: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள பிரபல புத்தகக் கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள பிரபல புத்தகக் கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் திருவள்ளுவர் சாலையில் சத்தியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பிரபல புத்தகக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். ஆனால் தீயை கட்டுபடுத்த முடியவில்லை. இதையடுத்து புகலூர் டிஎன்பிஎல் நிறுவனத்துக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் மற்றும் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர்.
Advertisement
Advertisement
இந்த தீ விபத்தில் இயந்திரங்கள், பல லட்சம் மதிப்பிலான புத்தகங்கள், நோட்டுகள், பேனா, பென்சில், கல்வி உபகரணங்கள் மற்றும் அச்சு இயந்திரங்கள், பைண்டிங் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.
சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், வழக்கம்போல் கடை உரிமையாளர் சத்தியமூர்த்தி இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் இந்த தீபத்து நிகழ்ந்துள்ளது.இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதும் காரணங்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.