முகப்பு
தற்போதைய செய்திகள்

காட்டுப்பன்றியை வேட்டையாடிய 8 பேர் கைது!

ஒடிசாவில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதைப் பற்றி..

Updated On : 11 டிசம்பர் 2024, 12:23 pm IST
- கோப்புப்படம்
பகிர்:

ஓடிசாவில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 8 பேரை வனத்துறை கைது செய்துள்ளது.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டதிலுள்ள ராம்ஜோடி கிராமத்தை சேர்ந்த லகேந்திரா ககாராய், ராய்சிங் சிங்குந்தியா, ராம்தாஸ் தெஹுரி, துப்ராய் சிங்குந்தியா, புதூ கெராய் மற்றும் கேஜூரி ஹெம்ப்ராம் ஆகிய ஆறுப்பேர் கொண்ட கும்பல் சிமிலிப்பால் புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புகுந்து காட்டுப்பன்றியை வேட்டையாடியது அங்குள்ள வனத்துறைக்குச் சொந்தமான கேமராவில் பதிவாகியிருந்தது.

இதனைத்தொடர்ந்து, இவர்களைப் பிடிக்க நேற்று (டிச. 10) சிமிலிப்பால் புலிகள் காப்பகத்தைச் சார்ந்த இருபது வனத்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று ராம்ஜோடி கிராமத்தில் நடத்திய சோதனையில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 6 பேரும் பிடிப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட காட்டுப்பன்றியின் இறைச்சியும், அவர்கள் பயன்படுத்திய வில் அம்புக்களும் கைப்பற்றப்பட்டன.

Advertisement

Advertisement

இதுகுறித்து, சிமிலிப்பால் வனத்துறை அதிகாரி சாம்ராட் கவுடா கூறுகையில், கைது செய்யப்பட்ட ஆறு பேரின் மீதும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேப்போல், கஞ்சம் மாவட்டத்தின் ஜகநாத்பிரசாத் காட்டுப்பகுதியில் காட்டுப்பன்றியை மின்சாரக் கம்பிப் பொறி வைத்து வேட்டையாடிய பிஹ்கரி நாயக் (வயது 51) மற்றும் கதால் நாயக் (52) ஆகியோரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.