தற்போதைய செய்திகள்

எதிர்நீச்சல் 2: தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் தொடர்பாக...

DIN

சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் - 2 தொடர் அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ளதால், மற்ற தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படுகிறது.

எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடர்வரும் டிச. 23 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

ரஞ்சனி தொடர் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்நிலையில், டிச. 23 ஆம் தேதி முதல் வாரத்தின் ஏழு நாள்களும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மல்லி தொடர் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்நிலையில், டிச. 23 ஆம் தேதி முதல் வாரத்தின் ஏழு நாள்களும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சேனலும் தங்களது தொடர்கள், டிஆர்பி பட்டியலில் முன்னணியில் இருப்பதற்காக புதுப்புது தொடர்களை அறிமுகப்படுத்தியும், ஒளிபரப்பு நேரத்தையும் மாற்றியமைத்து வருகிறது.

எதிர்நீச்சல் - 2 தொடருக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால், மற்ற சேனல்களிலும் தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நினைத்தாலே இனிக்கும் நாயகியுடன் இணையும் மோதலும் காதலும் தொடர் நடிகர்!

விமான விபத்தில் அஜீத் பவார் பலி!

தவெக கொடியுடன் ஆபத்தான சாகசம்! 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறை!

வீடு எப்போதும் சுத்தமாக இருக்க.. எளிய வழிகள்!

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT