FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிக் பாஸ் 10: சின்ன மருமகள், தாய்மாமன் தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

சின்ன மருமகள், தாய் மாமன் தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

2 செப்டம்பர் 2026, 3:05 pm IST
தாய் மாமன் தொடர் போஸ்டர். - படம்: யூடியூப்
பகிர்:

வரும் செப். 6 ஆம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10 சீசன் தொடங்கவுள்ளதால், சின்ன மருமகள், தாய்மாமன் தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சின்ன மருமகள்

மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் சிக்கியுள்ள, தமிழ்செல்வியின் கதையை சொல்லும், "சின்ன மருமகள்" தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

Advertisement

Advertisement

இந்தத் தொடரில் நடிகை ஸ்வேதா நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நவீன்குமார் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் தாமரைச் செல்வி, பானுமதி, சங்கவி ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி ஒளிபரப்பாகி வந்த சின்ன மருமகள் தொடர், வரும் செப். 7 ஆம் தேதி முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

தாய்மாமன்

நடிகர் ரஞ்சித் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் தொடர் தாய்மாமன். மேலும் இந்தத் தொடரில் தேவிப்பிரியா, ராஜ் கபூர், சாஸ்திக், ஷியாரா ஷாலினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மனோஜ் இயக்கும் இந்தத் தொடரை, பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

அண்ணன் பாத்திரத்தில் ரஞ்சித் நடிக்கிறார். தங்கை பாத்திரத்தில் தேவி பிரியா நடிக்கிறார். இவர்களுக்கிடையே நடக்கும் பாசப் போராட்டம், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த இந்தத் தொடர், செப். 7 ஆம் தேதி முதல் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும்.

As the 10th season of the Bigg Boss show is set to air starting September 6, the broadcast timings for the serials Chinna Marumagal and Thaai Maaman have been changed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments